கால்பந்து பிரியர்களுக்கான இணையதளம்
கால்பந்து ஜூரம் (உலககோப்பை கால்பந்து போட்டிகள்)பற்றிக்கொள்ள இன்னும் காலம் இருக்கிறது.ஆனால் உலககோப்பையின் போது மட்டும் கால்பந்து பக்கம் வராமல் எப்போதுமே எங்கள் விளையாட்டு உதையாட்டம் தான் என்று நினைக்கும் கால்ந்து பிரியர்களுக்கான சுவாரஸ்யமான இணையதளம் ஒன்று இருக்கிறது.
கால்பந்து பற்றி செய்திகளை தெரிந்து கொள்ள பல தளங்கள் இருக்கவே செய்கின்றன.ஃபூட்டிமிக்ஸ் என்னும் இந்த இணையதளத்தில் சிறப்பம்சம் என்னவென்றால் இது ரசிகர்களாளேயே உருவாக்கப்பட்டது என்பது தான்.
ஆம் இந்த தளத்தில் செய்திகளுக்கான இணைப்பை வழங்குவது ரசிகர்கள் தான். செய்திகளை இணையவாசிகளே சமர்பிக்க உதவும் டிக் பாணியில் கால்பந்து ரசிகர்களுக்காக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பாடுள்ளது.(தமிழில் உள்ள தமிழிழ் போல)
கால்பந்து தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்ள முடிவதோடு இணையவாசிகள் விரும்பினால் தங்களூக்கு விருப்பமான செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். வாக்குகளின் அடிப்படையில் அந்த செய்திகள் முன்னுக்கு வரும். கால்ப்நது ரசிகர்கள் கேள்விகள் கேட்டு தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும் வழி உண்டு.
கால்பந்து ரசிகர்களூக்கு சரியான தீனி என்றே சொல்ல வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக